தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராக இருப்பவர் சம்பத்குமார். இவரிடம் சீமான் விஜய்க்கு பணம் கொழுப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் அழைத்து வந்த நிலையில் பணம் கொழுப்பு அதிகமாக இருந்ததால்தான் அவரை அழைத்து வந்ததாக சீமான் கூறினார். இதற்கு சம்பத்குமார் பதிலடி கொடுத்து கூறியதாவது, சீமானுக்கு நடைமுறை அரசியல் பற்றி தெரியவில்லை.

தேர்தல் வியூக வகுப்பாளர்களை அரசியல் கட்சிகள் நியமிப்பது அவசியம் தான். ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத் தொகையை இழப்பதையே வழக்கமாகக் கொண்ட மற்றும் திரள்நிதி பெறும் சீமானுக்கு திறமையானவர்களின் ஆலோசனைகளை தவறாக தெரிவது ஆச்சரியம் இல்லை. ஊடகத்தில் இருப்பவர்கள் மைக்கை நீட்டி விட்டால் எதையாவது உளறுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி என்று இன்னும் எத்தனை காலம் தான் கூறிக் கொண்டிருப்பீர்கள். மேலும் சீமானுடன் ஒருபோதும் எங்களுக்கு ஒத்துப் போகாது என்று கூறினார்.