இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டில் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 12 போட்டிகளில் 3 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் தோனி ஓய்வு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து கொல்கத்தா- சென்னை அணி போட்டியின் போது தோனியிடம் கேட்டபோது, “அது பற்றி தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது.

தனக்கு எங்கு சென்றாலும் அன்பு கிடைப்பதை உணர முடிகிறது. தனக்கு 43 வயதாகிறது என்பதும் மறக்க முடியாது” எனக் கூறினார். மேலும் “தற்போது நான் 2026 ஆம் ஆண்டுக்கான சென்னை அணியை தயார் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறேன்” எனவும் கூறினார்.

இதனை அடுத்து ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தோனி வெளியிடவில்லை எனவே அவர் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.