நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் ஏரி மேல் கரையில் பாலகுமாரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ராணுவத்தில் வேலை பார்த்த பாலகுமாரன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதே போல சிங்கப்பூரில் வேலை பார்த்த பாலகுமாரனின் நண்பர் கார்த்தியும் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று கார்த்தியும் பாலகுமாரனும் இருசக்கர வாகனத்தில் நாகப்பட்டினத்திற்கு சென்று விட்டு மீண்டும் வேதாரண்யத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தேத்தாகுடி புது ரோடு அருகே சென்றபோது நாகப்பட்டினம் நோக்கி சென்ற சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கார்த்தியும் பாலக் குமாரனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று கார்த்தி மற்றும் பால குமாரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.