நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி இளஞ்சியம். இந்த தம்பதியினர் மகன் பாண்டியராஜ், மருமகள் வைதேகி பேர குழந்தைகள் சுஜித்(5), ஐவிழி(4) ஆகியோருடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் செல்வமும் பாண்டியராஜன் அப்பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து சோளம் பயிரிட்டனர். இந்த நிலையில் இளஞ்சியம் தனது பேர குழந்தைகளை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றார்.

அங்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் இளஞ்சியமும், பேரக் குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மின் இணைப்பை துண்டித்து மூன்று பேரையும் மீட்டனர். அதன் பிறகு அவர்களது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.