ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். ஆளுநரை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டியளித்தாவது “தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தின் உள்ளே சென்று கொலை செய்துள்ளனர்.

விழுப்புரத்தில் விஷ சாராயத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று தஞ்சையில் பாரில் மது அருந்திய 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். அ.தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் ஏதும் நிகழவில்லை” என்று அவர் கூறினார்.