சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வைஷாலி நகரை சேர்ந்தவர் எம் எல் ஏ ரிகேஷ் சென். இவர் அந்த பகுதியில் உள்ள பூங்காவிற்கு சென்று உள்ளார். அங்கு ஏராளமான காதல் ஜோடிகள் இருந்த நிலையில் இதனை பார்த்த எம் எல் ஏ காதல் ஜோடி இடம் சென்று, இங்க என்ன செய்கிறீர்கள்? பூங்காவில் இப்படி இருப்பது நல்லதல்ல என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட காதல் ஜோடி, “OYO-க்கள் மூடப்பட்டுள்ளன. அதனை திறந்து எங்களை உள்ளே செல்ல அனுமதியுங்கள் நாங்கள் அங்கு செல்கிறோம்” என கூறியுள்ளனர். இதனைக் கேட்ட எம்எல்ஏ அதிர்ச்சியடைந்துள்ளார்.