நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் அந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தி நேற்று நேற்று போலீசார் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய நிலையில் அதனை கிழித்தது சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக கேட்ட போலீசாரை  சீமான் வீட்டு காவலாளிகள் தாக்கினர். இதன் காரணமாக போலீசார் காவலாளிகள் இருவரை கைது செய்த நிலையில் அவர்களுக்கு நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது சீமானின் மனைவி கயல்விழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அந்த சம்மனை படிப்பதற்காக நான்தான் கிழித்து வர சொன்னேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். எங்களை அசிங்கப்படுத்தி மனரீதியாக துன்புறுத்துவதற்கு காவல்துறை முடிவு செய்து இப்படி எல்லாம் செய்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் தான் என்று கூறியதே தவிர மறுநாளே வர சொல்லவில்லை.

அந்த அம்மா அதாவது நடிகை விஜயலட்சுமி எத்தனை நாளாக இப்படி பேசிட்டு இருக்கிறார். அவரை அசிங்கப்படுத்துவதற்கு தானே இப்படி பாலியல் குற்றம் என்று போடுறீங்க. சீமான் மக்களுக்கான தலைவர். அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்கள் என்ன மரியாதை கொடுக்கிறீர்கள். பாலியல் வழக்கை  விரைந்து முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறிய நிலையில் அதற்கு அடுத்த நாளே எங்கள் வீட்டிற்கு வருவீர்களா. எங்களை அசிங்கப்படுத்த தானே இப்படி எல்லாம் செய்கிறீர்கள். மேலும் எத்தனையோ வழக்கு சீமான் மீது இருக்கும் நிலையில் தற்போது அவரை அசிங்கப்படுத்துவதற்காக தான் பாலியல் குற்றம் வழக்கு பதிவு போடப்பட்டிருப்பதாக கயல்விழி பரபரப்பு குற்ற சாட்டுகளை முன் வைத்துள்ளார்