
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கடந்த காலத்தில் பாகிஸ்தான் சேனலில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில் அவர், “நாங்கள் இந்தப் போரில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளோம். நம்முடைய இராணுவம் மிகவும் வல்லமை வாய்ந்தது.
View this post on Instagram
இந்திய ராணுவம் எங்களுடன் போட்டியிட முடியாது,” எனக் கூறியுள்ளார். மேலும், “யாரும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. எந்த மதமும் பயங்கரவாதத்தைக் கூறவில்லை. நாங்கள் அமைதிக்காக போராடுகிறோம்,” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அப்ரிடி தொடர்ந்து இந்தியாவை குறிவைத்து பேசும் வகையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அட்டாரி-வாகா எல்லையை சென்றடைந்து, அங்கும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், “இந்தியா தனது சொந்த மக்களைக் கொன்று பின்பு பாகிஸ்தானைக் குறை கூறுகிறது” எனவும் ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த ஷாஹித் அப்ரிடிக்கு கண்டனங்கள் குவிகிறது.