
மத்திய பிரதேஷ் மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு நண்பர்கள் இருவர் சென்றுள்ளனர். அதில் ஒருவர் தனது கையில் துப்பாக்கியுடன் இருந்துள்ளார். உணவக கவுண்டருக்கு சென்று தங்களுக்கு பீட்சா வேண்டும் என்று ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் ஊழியர்கள் இரவு தாமதமாகி விட்டதால் தற்போது பீட்சா கிடைக்காது எனக் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரில் ஒருவர் உணவக வாசலை நோக்கி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட தொடங்கினார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://x.com/FreePressMP/status/1857044602018021660