திமுக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறப் போவதாக வெளியான அதிரடி முடிவு, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் மிக முக்கியமான அதிரடி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அமைச்சரவையில் இடம்பெற விசிக எடுத்த முடிவுக்குப் பின்னால் எந்தவிதமான பதவி ஆசையும் காரணம் இல்லை என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், விசிக-விற்கும் திமுக-விற்கும் இடையே மிக வலுவான கொள்கை புரிதல் எப்போதும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் நிலவும் சில முக்கிய நெருக்கடிகள் காரணமாகவே இந்த அதிரடி முடிவை விசிக எடுக்க வேண்டியிருந்தது என்றும், இந்தச் சூழ்நிலையை “அண்ணன் ஸ்டாலின் அவர்கள் நன்றாகவே அறிவார்” என்றும் திருமாவளவன் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.
பதவிக்காக அல்லாமல் கொள்கைக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற அவரது இந்த விளக்கம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
