பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிஜ வாழ்க்கை மன அழுத்தமும், ஏமாற்றமும் நிறைந்த நரகமாக மாறியுள்ளதாக இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு இளைஞர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், நீச்சல் குளம், கிளப் ஹவுஸ் போன்ற அனைத்து பிரீமியம் வசதிகள் இருந்தபோதிலும், திறந்தவெளி சமையலறை புகையினால் ஏற்படும் அத்துமீறல் மற்றும் மோசமான வடிகால் அமைப்பால் குளியலறையிலிருந்து வரும் துர்நாற்றம் தியானம் செய்யக்கூட விடுவதில்லை எனத் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், குடியிருப்புகளின் நூற்றுக்கணக்கான குளிர்சாதன வசதிகளிலிருந்து (AC) வெளியேறும் வெப்பக் காற்றினால் வெளிப்புறத் தோட்டங்கள் உலைக்களமாக மாறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நகரத்தில் ஒரு நல்ல சொகுசு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக மக்கள் லட்சக்கணக்கில் கடன் வாங்கி, அதனை 25-30 ஆண்டுகள் நிறுவனங்களில் அடிமைகளைப் போல உழைத்து அடைப்பதாகவும், ஆனால் கிராமங்களில் எளிய உணவைச் சாப்பிட்டுவிட்டு மக்கள் நிம்மதியாக உறங்குவதே உண்மையான மகிழ்ச்சி என்றும் அவர் பேசியுள்ளார்.
View this post on Instagram
“>
52 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இக்காணொளிக்கு, “கிராமத்து எளிய வாழ்க்கையே சிறந்தது” என ஒரு தரப்பினரும், “இந்த நரக வீட்டை எங்களிடம் கொடுத்துவிடுங்கள், நாங்கள் வாழத் தயார்” என மற்றொரு தரப்பினரும் சோசியல் மீடியாக்களில் தங்களது மாறுபட்ட கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
