
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கிஷோர். இவர் தலைமைச் செயலகம் என்ற வெப் தொடரில் நடித்துள்ள நிலையில் அந்த தொடர் கடந்த 17:ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் கிஷோர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில், மோடி பொது வாழ்க்கை மட்டும் இல்லாமல் மனிதராகவும் வாழ தகுதியற்றவர்.
இவரைப் போன்ற ஒருவரின் வாய் மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது மிகப்பெரிய பாவ செயல். உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூற அவர் வெட்கப்பட வேண்டும். அவர் மிகப்பெரிய பொய்யர், கோழை, அதிக திமிர் கொண்டவர், மோசமானவர், கீழ்தரமானவர், முட்டாள், மக்களுக்கு எதிரானவர், ஆபத்து நிறைந்தவர், ஊழல் நிறைந்த சர்வாதிகாரி என்று விமர்சித்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram