
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கெட் அவுட் ஸ்டாலின் என்று பதிவிட்டுள்ளார். அதாவது கெட் அவுட் மோடி என்று திமுக ஐடி விங் பதிவிட்டு இருந்ததால் தற்போது கெட் அவுட் ஸ்டாலின் என்று அண்ணாமலை பதிலுக்கு பதிவிட்டுள்ளார். அதோடு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,
ஒரு குடும்பத்தின் மேலாதிக்கதிற்காக கறை படிந்த அமைச்சரவையை கொண்டுள்ள ஊழலின் மையமாக திகழ்தல், சட்டம் ஒழுங்கை கண்டு கொள்ளாமல் இருத்தல், தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுதல், அதிகரித்து வரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை, சாதி மற்றும் மத அடிப்படையில் ஆன பிரிவினைவாத அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடு உள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணங்களால் இந்த திமுக தலைமையிலான அரசு தமிழ்நாட்டு மக்களால் ஆட்சியில் இருந்து விரைவில் அகற்றப்படும் என்று கூறினார்.