
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் தன்னுடைய உணவகத்தில் ஊனமுற்றவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கியுள்ளார். தேனியை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் வீரம் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். இவர் காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித் பெயரை சொல்லி ஊனமுற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு தற்போது பிரியாணி விருந்து வைத்துள்ளார். மேலும் அஜித் ரசிகரின் செயலுக்கு தற்போது விஜய் ரசிகர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.