ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மனோஜ் என்ற 12 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் மனோஜ் சில குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டில் இருந்த ஒரு மர பீரோவிற்கும் ஜன்னலுக்கும் இடையே ஊஞ்சல் கட்டி குழந்தைகள் விளையாடினர்.

இந்த ஊஞ்சலில் மனோஜ் ஆடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த மர பீரோ திடீரென சாய்ந்து மனோஜ் மீது விழுந்தது. இதில் அந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்து விட்டான். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.