கோவை மாவட்டத்தில் வசிப்பவர் கோபால். இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில்  சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபொழுது இவருடைய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிரே பேசிய நபர் உங்கள் வீட்டு மின் இணைப்புக்கு இன்னும் மின்சாரம் கட்டணம் கட்டவில்லை உடனடியாக கட்ட விட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கோபால் உடனே மின் கட்டணத்தை கட்டி விடுவதாக கூறியுள்ளார். உடனே எதிர்முனையில் இருப்பவர் உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை கூறுங்கள்.

அல்லது செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும் அதன் மூலம் நீங்கள் உங்களுடைய வீட்டின் கட்டணத்தை செல்லலாம் என்று கூறியுள்ளார். இதன்படி கோபாலும் உடனடியாக தன்னுடைய வங்கிக் கணக்கு விவரங்களை அவரிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய செல்போன் எண்ணிற்கு ஓடிபி வந்துள்ளது. அந்த நம்பரையும் கோபால் அந்த நபரிடம் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருடைய வங்கி கணக்கிலிருந்து வெவ்வேறு கட்டங்களாக 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.