சிறை கைதிகளுக்கு காணொளி தொலைபேசி வசதியை ஏற்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் உயர்த்தி வழங்குவதோடு காணொளி தொலைபேசி வசதியினை புதியதாக ஏற்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதாவது, கைதிகளுக்கான தொலைபேசி வசதியை மாதத்திற்கு 10 முறை ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் உயர்த்தி, வீடியோ காலிங் வசதியை ஏற்படுத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் குடும்பத்துடன் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.