இன்றைய காலகட்டத்தில் பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவ்வப்போது வங்கிகள் சார்பாகவும். காவல்துறை சார்பாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் குற்றவாளிகள் சமூக ஊடகங்களை ஒரு தளமாக பயன்படுத்தி அப்பாவி மக்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள். சமீபத்தில், இந்தியா போஸ்ட் என்ற பெயரில் ஐபோன் 15-ஐ பரிசாகப் பெறுவதற்கான வாய்ப்பு என்று ஒரு போலி சலுகை சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

சைபர் கிரைம் குற்றவாளிகள் இந்தியா போஸ்ட் என்ற பெயரில் போலி இணைப்பை உருவாக்கி ட்விட்டரில் இதனை பரவலாக பரப்பி வருகின்றனர். இதற்கு பதிலளித்த தபால் துறை, தாங்கள் எந்த ஐபோன்களையும் பரிசாக வழங்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இது போன்ற போலி பதிவுகளை நம்பவேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.