கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பணத்திற்காக பெண் தனது மகளையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராசாத்தி. இவரது முதல் கணவர் சண்முகசுந்தரம் கருத்து வேறுபாடு காரணமாக சண்முகசுந்தரத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தார். அவர்களுக்கு 20 வயதான மகள் உள்ளார்.

முன்னதாக ராசாத்தி பிரேம் நசீர் என்பவரை திருமணம் செய்யாமலே அவருடன் ராசிபாளையம் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் ராசாத்தியும் பிரேம் நசீரும் இணைந்து ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 20 வயதான மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் ராசாத்தி மற்றும் பிரைம் நசீர் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த பெண்ணை காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.