
உத்திரபிரதேசத்தில் கிரிண்டர் செயலி பயன்படுத்துபவர்களை உல்லாசத்திற்கு அழைத்து துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை போலீசார் கைது செய்தனர். உத்தர் பிரதேச மாநிலம் நொய்டா போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உபேந்திரா, ஜெய ராகவ், ஹனி, தட்ச், ஆகிய நான்கு பெரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் கிரிண்டர் செயலியில் நண்பர்களாக அறிமுகமாகி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை உல்லாசமாக இருக்கலாம் என கூறி தனியாக அழைத்து அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. கைதானவர்களிடமிருந்து துப்பாக்கி, செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.