கடலூர் மாவட்டம் சோழபுரம் பகுதியில் கணவனை இழந்த 45 வயது பெண் வசித்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லை. இந்த பெண்ணின் தங்கை தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகன் 12- ஆம் வகுப்பும் இளைய மகன் 10-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவரை இழந்த அந்த பெண்ணுக்கு தங்கையின் கணவர் அவ்வபோது உதவி செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நேற்று முன்தினம் 45 வயது பெண்ணின் வீட்டிற்கு சென்ற தங்கையின் கணவர் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனைக் கண்ட ஊர் மக்கள் உனது கணவர் அக்காள் வீட்டில் இருப்பதாக தங்கையிடம் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த தங்கை தனது இரண்டு மகன்களுடன் அங்கு சென்று அக்காவுடன் தகராறு செய்துள்ளார்.

இதற்கிடையே மனைவியை பார்த்ததும் அந்த நபர் தப்பித்து ஓடி விட்டார் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி நீ உயிரோடு இருந்தால் தானே கணவருடன் தொடர்பில் இருப்பாய் என கூறி அந்த பெண் தனது மகன்களுடன் சேர்ந்து அக்காவை சரமாரியாக தாக்கி கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாயையும் இரண்டு மகன்களையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.