உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ள நிலையில் முதல்வர ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்..

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்து முடிந்தது. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, துரைமுருகன், ஏ.வ.வேலு மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூபாய் 5.50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்காக இலக்கை நிர்ணயித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தொழில்துறை முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழில் வழிகாட்டி மையம் மூலம் மேற்கொள்ளப்படும். முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழாவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்படும்.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தைவான் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சென்னையில் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.