ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணமாக ரூபாய் 1000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் பற்றி அறிவிக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் ரூபாய் 5000 பொங்கல் பணம் வழங்க வேண்டும் என பேட்டியளித்தார். இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு பொங்கல் தொகுப்பை மட்டும் அரசு அறிவித்துள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூபாய் 1000 வழங்க வேண்டும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரியில் ரூபாய் 5000 வழங்க வேண்டும். எண்ணூரில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 5000 வழங்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் வழங்கிய கரும்பு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது. கரும்பு கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறாது நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். கரும்புக்கான பணம் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளிடம் சென்றடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.