
உலக பட்டினி தினம் மே 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதாவது உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தும் விதமாக உலக பட்டினி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மே 28ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.
இந்த தகவலை புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அன்னதானம் வழங்கிட வேண்டும் என தன் அறிக்கையில் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Thalaivar @actorvijay Sir.!@tvkvijayhq @TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/ppCRgvz1B4
— N Anand (@BussyAnand) May 26, 2024