
நம்முடைய ஒவ்வொருவரின் சிரிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உலகை மாற்றும் ஒரு சக்தி இருக்கிறது . அந்த வகையில் அக்டோபர் 6 அன்று உலக சிரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நேர்மறை ஆற்றல் மற்றும் வெளிப்பாடுகளை வெளிப்படுத்த கொண்டாடப்படுகிறது. நேர்மறை உணர்ச்சிகள் எப்படி ஒரு மனிதனில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. சிரிப்பால் ஏற்படும் பல ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இது உதவுகிறது.
சிரிப்பை சிறந்த மருந்து என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது என்று யோகா நிபுணரும் டிவைன் சோல் யோகாவின் நிறுவனருமான தீபக் மிட்டல் தெரிவித்துள்ளார். சிரிப்பு வலியை குறைக்கவும் மகிழ்ச்சி மனநிலை அதிகரிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரவும் உதவுகிறது. உண்மையில் மனதையும் உடலின் சமநிலைக்கு கொண்டு வர சிரிப்பு ஒரு சிறந்த ஆயுதம் . பல நூற்றாண்டுகளாகவே இது உடலையும் மனதையும் குணப்படுத்த பயன்பட்டது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவை பொதுவான நிகழ்வுகள் ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் சிரிப்பின் முக்கியத்துவத்தை புறக்கணிப்பது கடினம். தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் சிரிப்பு கிட்டத்தட்ட 40 கலோரிகள் எரிக்கும். எனவே ஒரு வருடத்தில் ஒரு நபர் தினசரி ஒரு டோஸ் சிரிப்பின் மூலம் நான்கு முதல் ஐந்து பவுண்டில் வரை எரிக்கலாம்..