இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ஐந்தாம் தேதி உலக ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மற்றவரின் குழந்தைகள் முன்னேற உழைப்பவர்களாக இருப்பவர்கள் தான் ஆசிரியர்கள். ஊழியத்திற்காக வேலை பார்க்கிறோம் என்ற எண்ணத்தையும் தாண்டி பல தியாகங்களை ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் மாணவர்களுக்கு செய்கின்றனர். ஆசிரியர்களின் பொறுப்புகள், உரிமைகள் மற்றும் மதிப்பை பெருமைப்படுத்தும் விதமாக உலக ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

கல்விப் பணிகளில் ஆசிரியர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகள் என சமூகம் மீதான ஆசிரியர்களின் அக்கறை உள்ளிட்டவற்றை கவுரவிக்கும் விதமாக உலக ஆசிரியர்கள் தினத்தை கொண்டாட வேண்டும் என்று 1994 ஆம் ஆண்டு பரிந்துரை செய்த நிலையில் உலக ஆசிரியர் தினம் அக்டோபர் ஐந்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களை பெருமைப்படுத்த சர்வதேச தினமாக தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம், 1966 ஆம் ஆண்டு ஒரு சிறப்பு அரசாங்கங்களுக்கிடையே ஆன மாநாட்டின் போது ஆசிரியர்களின் நிலை குறித்த யுனெஸ்கோ பரிந்துரையை அந்த மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுவது போல ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளில் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இருந்தாலும் பெரும்பாலான நாடுகள் 1994 ஆம் ஆண்டு யுனெஸ்கோபால் அறிவிக்கப்பட்ட அக்டோபர் ஐந்தாம் தேதி உலக ஆசிரியர் தினம் ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.