
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1300 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 7.8ஆக பதிவானது. 1700 கட்டடங்களுக்கு மேல் இடிந்து கிடப்பதால் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில் தாமதம் நிலவுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா உதவ தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவுக்கு, 100 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவை (NDRF) அனுப்பியுள்ளது இந்தியா. அதோடு அவசரகால மருந்துகளையும் அனுப்பியுள்ளது. தேவைப்பட்டால் மேலும் உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.