தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இன்று தன்னுடைய 74 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில் தற்போது நடிகை நயன்தாராவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலகிலேயே மிகவும் இனிமையான மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் தனி ஒருவர் தினமும் எங்களை இன்ஸ்பயர் செய்பவர். உங்கள் பிறந்த நாள் எங்களைப் போன்ற கோடிக்கணக்கானோருக்கு கொண்டாட்டம். உங்களுக்கு தேவையான அனைத்தையும் கடவுள் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் சூப்பர் ஸ்டாருக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.