உலகின் மிகச் சிறிய நாய் என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த பெர்ல் என்ற நாய் படைத்துள்ளது. இதன் உயரம் 5 அங்குடத்தை விட மிகவும் குறைவு. உலகில் தற்போது உயிருடன் இருக்கும் நாய்களில் இதுதான் மிகவும் சிறியது. பொதுவாகவே ஒரு குச்சி ஐசின் உயரம் கூட 6.5 அங்குலம் இருக்கும். ஆனால் இந்த நாயின் மொத்த உயரமே 3.59 அங்குலம் தான் அல்லது ஒன்பது புள்ளி 14 சென்டிமீட்டர்.

உலகின் மிகவும் உயரம் குறைவான நாய் இனம் சிவா வா. இந்த இன நாய்களில் ஒரு ஆரோக்கியமான பெண் நாயின் உயரம் 15 சென்டிமீட்டர். எடை 1.8 கிலோ. அதுவே ஆண் நாய்கள் இரண்டு புள்ளி ஏழு கிலோ எடையும் 20 சென்டிமீட்டர் உயரமும் இருக்கும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல இந்த வகை நாய்கள் குறைப்பது அதிக சத்தத்துடன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.