
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள மற்ற அரசியல் தலைவர்களை விட பிரதமர் மோடியை அதிக அளவில் பயனர்கள் x தளத்தில் பின் தொடர்கிறார்கள். குறிப்பாக கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கு தொடங்கிய நிலையில் தற்போது 10 கோடி ஃபாலோயர்ஸ் உள்ளனர். இதனால் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் நேற்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அதில் உலகில் அதிகம் பின் தொடரப்படும் தலைவர்களில் ஒருவராக மாறியதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.