க்ரூடியா ஜூலனிகா என்பது ஒருவகையான மரம். இந்த மரங்களில் பூக்கள் பூத்து காய்கள் காய்த்து குலுங்கும். இதனை லெகுமே என்றும் அழைக்கிறார்கள். இதில் உள்ள காய்கள் மனிதர்களால் சாப்பிடக்கூடியது கிடையாது. இருந்தாலும் இவை இயற்கையின் ஓர் அங்கமாகவும் சுற்றுச்சூழலுக்கு பயனுள்ளதாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. முதன்முதலாக இந்த மரங்கள் குறித்த விவரங்கள் 1868 ஆம் வருடம் சேகரிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டது . இந்த மரங்கள் இருப்பதற்கான சான்று உலகில் எங்குமே இல்லை. இதனால் 2012 இல்  இந்த  மரம் அழிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக 2019 ஆம் வருடம் இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு பக்கத்தில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தற்போது சாலை கட்டுமானத்திற்கு இந்த மரத்தை வெட்ட வேண்டிய சூழ்நிலை உருவாக இந்த மரத்தை அரசு வெட்டி சாய்த்து விட்டது. இதனால் அரிதாக இருக்க கூடிய இந்த மரம் இருந்து சுவடு தெரியாமல் போனது. எனவே உலகில் இனிமேல் இதை எங்கும் பார்க்க முடியாது என்று சூழியியல் ஆர்வலர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இலங்கையில் இந்த மரங்கள் மேலும் 40 இடங்களில்   இருப்பதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் வருத்தப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை எங்கு இருக்கின்றன என்ற தகவலை தெரிவிக்கவில்லை இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.