
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் திருமணம் வரும் 27 ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது உலகின் 3 வது பெரிய பணக்காரரான இவருக்கு ரூ. 18 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தன்னுடைய முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட்டை கடந்த 2020 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில் தற்போது செய்தி வாசிப்பாளரான லாரன் சான்சஸ் என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இந்நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக முடிவு செய்த நிலையில் வரும் ஜூன் 27ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரத்தில் வைத்து நடைபெறுவதாக கூறப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. திருமணத்திற்கு உலகத்தில் உள்ள பணக்காரர்கள் அனைவரும் வருகை தரவிருப்பதால் வெனிசில் நட்சத்திர ஹோட்டல்கள், படகு டாக்சிகள் ஆகியவை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமண பத்திரிக்கை அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் திருமணத்திற்கு வருபவர்கள் யாரும் பரிசுப் பொருட்கள் கொண்டு வர வேண்டாம் என்றும், வரும் விருந்தினர்கள் வெனிஸ் நகரில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக நன்கொடை வழங்கப்படும் என்றும் இருந்தது. அதோடு பள்ளி குழந்தைகளின் புத்தகம் போல பறவைகள், படகு, பட்டாம்பூச்சிகள், பாலம் போன்ற படங்கள் இடம்பெற்றிருந்தது.
இதனை நெட்டிசன்கள் ஒரு உலக பணக்காரரின் திருமண பத்திரிக்கையா இது? என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள படங்களால் தொழிலதிபர் ஜெப் பெசோஸின் திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.