
அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பல விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறார்கள். அதன் பிறகு நாசா விண்வெளி தொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில் மோர் ஆகியோர் கடந்த மாதம் சென்ற நிலையில் வின்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தான் பூமிக்கு திரும்புவதாக நாசா தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் உடல்நலம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளது. இப்படி உயிரை பணயம் வைத்து விண்வெளி செல்லும் வீரர்களுக்கு நாசா எவ்வளவு சம்பளம் கொடுக்கிறது என்பது குறித்து தற்போது பார்ப்போம். அதன்படி நாசா அமைப்பின் இணையதள தகவல்கள் படி விண்வெளி வீரர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 1.27 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு மாதத்திற்கு விண்வெளி வீரர்களுக்கு மாதம் ரூ.10,58,000 சம்பள மாக கிடைக்கிறது. இது ரேங்க் அடிப்படையில் மாறும். மேலும் இந்தியாவில் விண்வெளி வீரர்களுக்கு மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.