
தெலுங்கு திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிஷ் வெங்கட். இவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். சிகிச்சைக்கு 50 லட்சம் ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரபல நடிகரான பிரபாஸ் விஷ் வெங்கட்டின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நிதி உதவி வழங்கியுள்ளார். தற்போது நிதி கிடைத்த பிறகும் சிறுநீரக நன்கொடையாளரை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தில் யாருடைய சிறுநீரகமும் பொருத்தமாக இல்லை. எனவே சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நன்கொடையாளரை கண்டறிய உதவுமாறு பிஷ் வெங்கட் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.