
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 37 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் தோல்வியடைந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மேலும் இதில் இறந்தவர்களுக்கு ரூ.25 லட்ச ரூபாய் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நவீன சிகிச்சையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.