அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் படித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சீட்ஸ் (SEEDS) சேவையின் வாயிலாக பல உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்ற 2022-ம் வருடத்தில் மட்டும் தமிழகத்தில் சீட்ஸ் (SEEDS) உதவித்தொகையை பெற 1500-க்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

அதேபோன்று நடப்பு ஆண்டு 12ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பாலிடெக்னிக், டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் சீட்ஸ் (SEEEDS) உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த சீட்ஸ் உதவித்தொகை பெற தகுதி குறித்தான பட்டியலும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 12-ம் வகுப்பில் குறைந்தது 80 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.  அதோடு பொறியியல் பிரிவில் 480க்கும் மேற்பட்ட மதிப்பெண்(அ) 180க்கும் மேற்பட்ட கட்ஆப் பெற்ற மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

அடுத்ததாக அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தவர்கள் மற்றும் நீட்தேர்வில் 500-க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற்றவர்களும் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் கட் ஆப் 180-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற துணை மருத்துவர்களும், 480-க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற்ற கலை, அறிவியல் அல்லது பிற படிப்பு பயிலும் மாணவர்களும், 10-ம் வகுப்பில் 350-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பட்டதாரி உயர் படிப்பை தொடர்வதற்கான இந்த உதவித்தொகையை பெற மாணவர்கள் https://www.seeds.org (அ) https://www.seeeds.org/scholarship என்ற ஆன்லைன் இணையதளம் முகவரி பக்கத்தின் வாயிலாக வருகிற மே 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.