
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கொலாப் உசைன்(20) என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் உசேன் எர்ணாகுளம் பகுதியில் இருக்கும் தனது அக்காவின்வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டு வேலைக்கு வந்த அசாம்மை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் உசைனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் சிறுமியை தன்மையில் சந்தித்து செல்போனில் ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
பின்னர் உனது குடும்பத்தினருக்கு இந்த புகைப்படங்களை அனுப்பி விடுவேன் என மிரட்டி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் சிறுமி தனது குடும்பத்தினரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் உசைனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.