பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் அவர் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து ராகுல் காந்தி அரசு பங்களாவை காலி செய்து சாவியை  ஒப்படைத்தார். இந்நிலையில் ராகுல் காந்தி, துக்ளக் லேன் சாலையில் உள்ள அரசு பங்களாவில் 19 ஆண்டு காலம் வாழ அனுமதித்த இந்திய மக்களுக்கு எனது நன்றி என கூறியுள்ளார். அரசு பங்களாவை காலி செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘உண்மையை பேசுவதற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறேன். சில நாட்கள் ஜன்பத் சாலையில் உள்ள என் தாயார் சோனியா காந்தியின் இல்லத்தில் வசிக்க இருக்கிறேன்’ என்றார்.