எத்தியோப்பியாவில் முலுவர்க் அம்பாவ் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் கிட்டதட்ட 16 வருடங்களாக சோறு மற்றும் தண்ணீர் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். இவருடைய குடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய குடலில் எந்தவிதமான சாப்பாடோ அல்லது தண்ணீரோ இருந்ததற்கான அடையாளங்கள் இல்லை என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் அவர் சோறு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருப்பதால் அவருடைய உடல் நலத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்றும் கூறியுள்ளனர். இவருக்கு 10 வயது இருக்கும் போது திடீரென பசி மற்றும் தாகம் இல்லாமல் போய் உள்ளது. அதிலிருந்து அவர் உணவு மற்றும் தண்ணீர் எடுத்துக்கொள்ளவில்லையாம். மேலும் இதனை யாராவது நம்ப மறுத்தால் அவர்களை தன்னுடன் வந்து தங்குமாறு அந்த பெண் கூறுகிறார். அப்போது தான் சொல்வது உண்மை என்று புரியும் என்கிறார்.