கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் நரசிங் மாணவி ஒருவர் வசித்து வரும் நிலையில் அந்த மாணவி ஒரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த வாலிபரின் நண்பர் ஒருவரும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் மூவரும் அடிக்கடி சந்தித்து பேசிய நிலையில் திடீரென மாணவியின் நண்பர் அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி மாணவியும் வாலிபரின் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு வாலிபரின் நண்பரும் இருந்துள்ளார். இவர்கள் 3 பேரும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வாலிபர்கள் 2 பேரும் மது குடிக்க ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் மாணவியையும் மது குடிக்குமாறு கூற முதலில் மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில் நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் பின்னர் மதுவை குடித்தார். அதன்பிறகு சிறிது நேரத்தில் போதை தலைக்கேறி மாணவி மயக்கம் அடைந்து விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வாலிபர்கள் இருவரும் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி விடிய விடிய மாணவியை வீட்டில் வைத்து இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதன்பிறகு மறுநாள் காலை மாணவியை பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை மாணவி தன்னுடைய தோழி ஒருவரிடம் கூறிய நிலையில் மாணவி வகுப்பறையில் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டதால் ஆசிரியர்கள் மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். அப்போது மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை ஆசிரியர்களிடம் கூற காவல் நிலையத்தில் வாலிபர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த வாலிபர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.