UPI உலக அளவில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் UPI எனும் பணபரிவர்த்தனை அமைப்பு, பணம் செலுத்துவதற்குரிய மிக எளிய டிஜிட்டல் முறையாக உள்ளது. இதை மற்ற நாடுகளும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow போன்றவற்றின் ஒருங்கிணைப்பால் இருநாடுகளிலும் வாழும் மக்கள் பெரிதும் பயனடையப் போகின்றனர். இரண்டு நாடுகளிலும் வசிக்கும் மக்கள் மிக எளிதாகவும், வேகமாகவும் மலிவான கட்டணத்தில் பணத்தை அனுப்ப இயலும்.

இதுவரையிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) UPI சேவை வாயிலாக பணம் செலுத்த முடியாமல் இருந்தது. ஏனென்றால் இச்சேவை இந்திய சிம் கார்டுகளை கொண்ட போன்களில் மட்டுமே கிடைத்தது. எனினும் தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்கள் NRI (அ) NRO கணக்கை சர்வதேச சிம்முடன் இணைப்பதன் வாயிலாக UPI மூலம் ஈஸியாக பணம் செலுத்த முடியும். UPI மற்றும் PayNow வாயிலாக இந்திய மாணவர்கள் மிகவும் பயனடைவார்கள்.