கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி ஆஷ்ரா பேகம். இவருக்கும் ஷாஜகானின் தம்பி மனைவி ரோஷன் பேகம் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய் தகறாரு ஏற்பட்டது. இது குறித்து ரோஷன் பேகம் தனது தம்பி சுல்தானிடம் கூறியுள்ளார். அவர் சமீபத்தில் தான் வெளிநாட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் ரோஷன் பேகம் தனது உறவினர்களுடன் ஷாஜகான் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது ஷாஜகான் வீட்டில் இல்லை. உடனே சமையலறையில் இருந்த ஆஷா பேகத்துடன் அவர்கள் தகராறு செய்துள்ளனர்.

அவரை அடித்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயில் அஸ்ரா பேகத்தை முக்கி கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அஷ்ரா பேகம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் முக்கிய குற்றவாளி வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.