மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் நரேந்திர பஞ்சாபி என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்னா யாதவ் (42) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அவரை காதலிக்கவில்லை. இருப்பினும் நரேந்திர பஞ்சாபி தொடர்ந்து அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதோடு திருமணம் செய்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் மறுத்துவிட்டார். இருப்பினும் நரேந்திர பஞ்சாபி தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததால் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவ நாளில் பூக்கடையில் சப்னா வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற நரேந்திர பஞ்சாபி ஆத்திரத்தில் அந்த பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றினார். பின்னர் அவரை தீ வைத்து எரித்துவிட்டார். அதோடு தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிகிச்சைக்கு பிறகு நரேந்திர பஞ்சாபி கைது செய்யப்படுவார் என்ற காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.