
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜானி வேக்டர் (37). இவர் ஜெனரல் ஹாஸ்பிடல், ஹாலிவுட் கேர்ள், அனிமல் கிங்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜானி வேக்டர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவருடைய தாயார் சமூக வலைதளங்களில் கூறியுள்ளார். அதாவது கடந்த சனிக்கிழமை ஜானி வேக்டர் காரில் சென்று கொண்டிருந்த போது திருடர்களால் வழிமறிக்கப்பட்டார்.
அவர்கள் காரில் இருந்த சில பொருட்களை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் அதை தடுக்க ஜானி முயற்சிக்கவில்லை. இருந்தாலும் அவரை சுட்டு கொலை செய்துவிட்டார்கள் என கண்ணீர் மல்க அவருடைய தாயார் கூறியுள்ளார். இந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.