நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை ஊழியரும், அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் PF கணக்கில் செலுத்துவது அவசியம். அதன்படி உங்களுடைய பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து பணம் சேர்ந்து கொண்டே வருகிறது. அப்படி உங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் தவறி உள்ளது என்பதை எளிதாக நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.

பிஎஃப் பேலன்ஸ் தொகையை பார்க்க வேண்டுமென்றால் எஸ்எம்எஸ் மூலமாக, ‘EPFOHO UAN ENG’ என்ற முறையில் உங்களது UAN நம்பரை சேர்த்து 7738299899 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு உங்களது பிஎஃப் பேலன்ஸ் தொகை எவ்வளவு என்பது உங்களது போனுக்கு எஸ்எம்எஸ் மூலமாக வந்து சேரும்.

இதனைத் தவிர பிஎஃப் இணையதளம் மூலமாகவும் பேலன்ஸ் தொகையை நீங்கள் பார்க்க முடியும். அதற்கு முதலில் https://epfindia.gov.in/என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில்’Member passbook’என்பதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

அதில் UAN மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட வேண்டும்.

அதன்பிறகு தோன்றும் பக்கத்தில் உங்களது பிஎப் கணக்கில் உள்ள மொத்த பணம் மற்றும் வட்டி மூலம் கிடைத்த பணம் எவ்வளவு என்பதை நீங்கள் எளிதாக பார்க்கலாம்.

மேலும் உங்களது மொபைலில் இருந்து 011-22901406 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவும் எளிதில் பிஎஃப் பேலன்ஸ் தொகையை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இதனைத் தவிர மொபைலில் உமாங் ஆப் டவுன்லோட் செய்து அதில் எளிதாக உங்களது பிஎஃப் பேலன்ஸ் தொகையை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.