இந்தியாவில் இருந்து வெளியே பயணம் செய்ய நீங்கள் திட்டமிட்டிருக்கும் நிலையில் பாஸ்போர்ட் இல்லை என்ற கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் இருந்து கொண்டே விண்ணப்பத்தை சமர்ப்பித்து எளிய முறையில் பாஸ்போர்ட் வாங்க முடியும்.

அதற்கு முதலில் பாஸ்போர்ட் சேவா இணையதள பக்கத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும், பாஸ்போர்ட் மறு வெளியீடு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு திறக்கும் விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் நிரப்பி சமர்ப்பி என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மீண்டும் முகப்பு பக்கத்திற்கு சென்று view saved/ submitted application என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு pay and schedule appointment என்பதை கிளிக் செய்து பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் அப்பாயிண்ட்மென்ட்டை பெற பதிவு செய்ய வேண்டும்

பின்னர் விருப்பத்தை தேர்ந்தெடுத்து கட்டணத்தை செலுத்தி செயல்முறை முடிந்ததும் விண்ணப்ப ரசீதை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் அப்ளிகேஷன் ரசீதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு நீங்கள் அப்பாயிண்ட்மெண்ட் விவரங்கள் அனைத்தையும் பெறுவீர்கள்.

பாஸ்போர்ட் சேவா கேந்திராவுக்கு செல்லும் போது உங்களிடம் அனைத்து அசல் ஆவணங்களும் கட்டாயம் இருக்க வேண்டும்.

அதாவது பயன்பாட்டு பில், வருமான வரி மதிப்பீட்டு உத்தரவு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.

பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரர் கொடுத்த முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் மூலமாக பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். சாதாரண பாஸ்போர்ட்டுக்கான செயலாக்க நேரம் 45 நாட்கள் வரை மட்டுமே எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் தட்கல் முறையில் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு, பாஸ்போர்ட் விண்ணப்ப நேரம் 7 முதல் 14 நாட்கள் ஆகும்.