பொது இடங்களில் ஐபோன்கள் திருடு போவது என்பது அதிகரித்துள்ளது. திருடர்கள் ஐபோன் உரிமையாளர்களை நோட்டமிடுவது மட்டுமல்லாமல் அவர்களுடைய பாஸ்வோர்ட், ஆப்பிள் ஐ டி பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை தெரிந்து கொண்டு திருட்டியில் ஈடுபடுகின்றனர். இதற்காக ஆப்பிள் நிறுவனம் stolen device production என்ற புதிய அம்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய அம்சம் மூலமாக நம்பகமான வெளியிடங்களில் விட்டு வேறு இடத்திற்கு செல்லும் போது biometric authentication உறுதிப்படுத்தப்படும். Face ID and touch id தோல்வி அடைந்தாலும் அடிப்படை செயல்பாடுகளுக்கு உங்கள் சாதனத்தை நீங்கள் பயன்படுத்தலாம். அதேசமயம் பாதுகாப்பான சூழலுக்காக Apple ID Password, passcode மாற்ற முடியாது.

முதலில் உங்களுடைய ஐபோனில்  iOS 17.3 beta அப்டேட் செய்து Settings பகுதிக்கு செல்ல வேண்டும்.

அடுத்ததாக Face ID & Passcode அல்லது Touch ID & Passcode என்ற ஆப்ஷனை தேர்வு செய்து  Stolen Device Protection என்பதற்கு கீழ் Activate Protection என்பதை க்ளிக் செய்யவும்.

அவ்வளவுதான் இப்போது உங்களுடைய சாதனம் பாதுகாப்பாக இருக்கும். உங்களுடைய சாதனம் திருட்டுப் போனாலும் மற்றவர்கள் பயன்படுத்துவதில் இருந்து பாதுகாக்கலாம்