பொதுவாகவே அனைவரது வீடுகளிலும் கரப்பான் பூச்சி தொல்லை என்பது அதிகமாகவே இருக்கும். குறிப்பாக சமையலறையில் இவை செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. இதனால் சில உடல் நல பாதிப்புகளும் ஏற்படக்கூடும். வீட்டில் உள்ள கரப்பான் பூச்சியை ஒழிக்க என்னதான் செயற்கை மருந்துகள் வந்தாலும் நாம் வீட்டில் உள்ள சில இயற்கையான பொருட்களை வைத்து கரப்பான் பூச்சியை ஒழித்து விடலாம்.

காய்ச்சல் மற்றும் நோய்க்கு இவை வழி வகுக்கும் என்பதால் வீட்டில் இருந்து அவற்றை அகற்ற இதனை பின்பற்றவும். அதாவது பிரியாணி இலையை பொடியாக அரைத்து கற்பூரம் சேர்த்து மூலைகளில் வைக்கவும். அவை இதன் வாசனையால் வீட்டை விட்டு ஓடி விடும். போரிங் பவுடரை பேஸ்ட் செய்து சிறு உருண்டைகளாக உருட்டி கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில் வைத்து விடுங்கள். வேப்ப மரத்தின் இலைகளை பேஸ்ட் செய்து மூலைகளில் வைத்தாலும் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்