தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் விஜய் அவர்கள் பேசிய வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தையே ஆக்கிரமித்து வருகின்றன. அதில் குறிப்பாக கூத்தாடி என அவர் பலரும் கிண்டல் செய்தது குறித்து வெளிப்படையாக அவர் பேசியிருக்கும் காட்சிகள் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் அவர்களின் அந்த எழுச்சிமிகு பேச்சை நபர் ஒருவர் பாடலாக வடிவமைத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் உங்க மகன் உங்க அண்ணன் உங்க தம்பி உங்க தோழன் உங்க விஜய் உள்ளிட்ட வார்த்தைகளை மட்டுமே மையமாக வைத்து அந்த பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. அது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில்  வெளியிடப்பட அது தற்போது வைரலாகி வருகிறது.