நாடு முழுவதும் ரேஷன் கார்டு குறித்து பல்வேறு குற்றசாட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது ரேஷன் கடைகளில் பெறப்படும் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல குளறுபடிகளும் நடைபெற்று வரும் நிலையில் அரசு ரேஷன் கார்டுகளை ரத்து செய்து வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு ஆபரேஷன் எல்லோ என்ற பெயரில் தகுதி இல்லாத ரேஷன் கார்டுகளை ரத்து செய்து வருகிறது. அதாவது கடந்த செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு 4 கோடிக்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டதாகவும் அறிவித்துள்ளது . மேலும் தொடர்ந்து ஆறு மாதம் ரேஷன் கார்டு மூலமாக எந்த பொருளும் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு முழு பலன் வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.